இந்தியா விளையாட்டு

சரியான அடி..!! ஹெல்மெட்டை பதம் பார்த்த பவுன்சர்.. நிலைகுலைந்துபோன இந்திய அணி வீரர்.. வைரல் வீடியோ..

Summary:

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடிவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூஸிலா

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடிவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் வீசிய பவுன்சர், இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லின் ஹெல்மெட்டில் பலமாக அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகிறது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் விளையாடிவருகிறது.

இந்திய அணி சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் சற்று நிதானமாக ஆடிவந்தந்தநிலையில், ஆட்டத்தின் 17-வது ஓவரை நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் வீசினார்.

அந்த பந்தை இந்திய வீரர் சுப்மன் கில் எதிர்கொண்டார். கெயில் ஜேமிசன் வீசிய பந்து பவுன்சராக மாறி சுப்மன் கில்லின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் அவர் ஒரு நொடி நிலைகுலைந்து போனார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement