விளையாட்டு

பரபரப்பான நேற்றைய ஆட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் பாத்திங்களா..? கலகலப்பூட்டிய சாஹல்..!

Summary:

India vs New Zealand fourth T20 update 2020

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்து மண்ணில் T20 தொடரை இந்திய அணி வெல்வது இதுவே முதல் முறை.

இன்னும் ஒரு போட்டி மட்டும் மீதம் இருக்கும் நிலையில் நேற்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றிபெற்றது. போட்டியின் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் தேவை என்ற நிலையில் வீரர்கள் உட்பட ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.

Image result for india vs new zealand

அது வேறு ஒன்றும் இல்லை, பேட்டிங் செய்ய நியூசிலாந்து வீரர் சாண்ட்னர் களமிறங்கிய போது அவர் அருகில் சென்ற இந்திய அணி வீரர் சாஹல் அவரை முறைத்தார். என்ன நடக்கிறது என எல்லோரும் குழப்பமடைய, மறுவினாடியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அவர்கள் கிண்டலுக்காக வம்பிழுத்து விளையாடுவது தெரியவந்தது.

பரபரப்பான இந்த நிலையில் உங்களுக்கு இந்த கிளுகிளுப்பு தேவையா? என்பது போல் இருந்தது அவர்கள் நடந்து கொண்டவிதம்.


Advertisement