மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்..! 6 பந்து, 14 ரன்கள்..! அடித்து நொறுக்கி அசத்தல் வெற்றிபெற்ற இந்திய அணி..!

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்..! 6 பந்து, 14 ரன்கள்..! அடித்து நொறுக்கி அசத்தல் வெற்றிபெற்ற இந்திய அணி..!



India vs New Zealand fourth match super over

நியூசிலாந்து - இந்தியா இடையே நடைபெற்ற இன்றைய 4 வது T20 போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசதியுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட T20 போட்டியில் தற்போது விளையாடிவருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட நிலையில் இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. KL ராகுல், மற்றும் மனிஷ் பாண்டே தவிர மற்ற வீரரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனை தொடர்ந்து சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தது. 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் KL ராகுல் மற்றும் விராட்கோலி களமிறங்கினர்.

Ind vs New Zealand

முதல் பந்தில் சிக்சரும், இரண்டுவது பந்தில் பவுண்டரியும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்து மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார் KL ராகுல். இதனை தொடர்ந்து விராட்கோலியுடன் சாம்சன் ஜோடி சேர, நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார் விராட்கோலி.

இதன்மூலம் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓவரின் 5 வது பதில் பவுண்டரி விளாசி இந்திய அணியை வெற்றிபெற செய்தார் அணியின் கேப்டன் விராட்கோலி. மூன்றவது போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்ற நிலையில், நான்காவது போட்டியும் சூப்பர் ஓவரை சென்றது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருந்தது.