இந்தியா விளையாட்டு

அடுத்த போட்டிக்கு இந்திய அணியில் திடீர் மாற்றம்; தேர்வுக் குழுவின் அதிரடி முடிவு.!

Summary:

india vs aus 4th ODI match india team change

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்று அசத்தியது. அதன் பிறகு தொடங்கிய ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற பெற்றது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் 1 ரன்னும், ரோகித் சர்மா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய விராட்கோலி அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 

அடுத்து அடுத்து களமிறங்கிய இந்திய மட்டை வீச்சாளர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விஜய் சங்கர் மட்டும் 32 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். முடிவில் இந்திய அணி 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேட்டியளித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறும்போது: அடுத்து நடக்கும் நான்காவது ஒரு நாள் போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷபான்ட் அணியில் சேர்க்கப்படுவார். உலககோப்பை போட்டி தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி போட்டி தொடர் என்பதால் அனுபவம் பெரும் வகையில் ரிஷாப்பன்டுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும் இன்றைய போட்டியில் முகமது சமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய வில்லை எனில் புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார் என்று தெரிவித்தார். இதற்கு முன்பாகவே கேப்டன் விராட் கோலி 4வது ஒரு நாள் போட்டிக்கு அணியில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். ஆகவே மூன்று போட்டிகளிலும் சொதப்பிய ஷிகர் தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுல் அடுத்த போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement