இந்தியாவிடம் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்.! விக்கெட்டுகளை குறிவைத்து தூக்கும் தமிழக வீரர்.!

இந்தியாவிடம் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து அணி போராட்டம்.! விக்கெட்டுகளை குறிவைத்து தூக்கும் தமிழக வீரர்.!


india-playing-very-well-in-second-test

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலந்து அணி, அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சால், இங்கிலாந்து அணி 134 ரன்களில் அணைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அஸ்வின்  மட்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி  286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

test cricket

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது இந்திய அணி. இன்று இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சிவப்பாக பந்து வீசி வரும் அஸ்வின், இங்கிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 48.3 ஓவர்கள் நிலவரப்படி 7விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது இங்கிலாந்து அணி.