இந்தியா விளையாட்டு

தோல்வி முகத்தில் இந்தியா.! பயம் காட்டும் இங்கிலாந்து அணி.!

Summary:

இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தநிலையில் ஆடிவருகிறது.


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. இதனையடுத்து இந்திய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இந்தநிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது. இறுதியில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் ரோஹித் சர்மா அவுட் ஆனா நிலையில், சுப்மன் கில் 15 ரன்களும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 72 ரன்களும், கில் 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜாக் லீச் 
4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும், டொமினிக் பெஸ் மற்றும் பெண் ஸ்டோக்ஸ் தலா  ஒரு விக்கெட்டும் எடுத்தனர். தற்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி முகத்தில் ஆடிவருகிறது.


Advertisement