சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி! பந்துவீச்சாளர்கள் கைக்கொடுப்பார்களா?

சொற்ப ரன்களில் சுருண்ட இந்திய அணி! பந்துவீச்சாளர்கள் கைக்கொடுப்பார்களா?


India all out for 165 runs in 1st innings

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2 போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் ஆகும். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. முதல் நாளின் 55 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைபட்டது. 

Ind vs nz 1st test

இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து இன்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய வீரர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. 

ரஹானே 38, ரிஷப் பந்த் 10 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். 59 ஆவது ஓவரில் பண்ட்(19) மற்றும் அஸ்வின்(0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ரஹானேவும் 46 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 68.1 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் சௌதி மற்றும் ஜம்மிசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.