விளையாட்டு

அவரு இந்த அடி அடிப்பார்னு யாரும் நினைக்கல!! இக்கட்டான நிலையில் இந்திய அணியை வெற்றிபெறவைத்த வீரர்..

Summary:

இந்தியா - இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்

இந்தியா - இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளநிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதலே இலங்கை அணி வீரர்கள் நிதானமாக ஆடியநிலையில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்தது.

276 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கியநிலையில், தொடக்க வீரர்களான ப்ரித்விஷா 13 ரன்களிலும், தவான் 29 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து மனிஷ் பாண்டே (37 ரன்கள்), சூரியகுமார் யாதவ் (53 ரன்கள்), குர்னால் பாண்டியா (35 ரன்கள்) எடுக்க, அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டம் இழந்தனர். இதனால் இலங்கை அணி வெற்றிபெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி, இந்திய அணியை வெற்றிபெற செய்துள்ளார் தீபக் சாகர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் 82 பந்துகள் விளையாடி 69 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றநிலையில், இந்திய அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முன்னதாக ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சம் 12 ரன்கள் அடித்திருந்த தீபக் சாகர், இந்த போட்டியின் மூலம் தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

பேட்டிங்கில் மட்டுமில்லாமல், நேற்று பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடிய தீபக் சாகர், 8 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்த நிலையில், 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதனால் நேற்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருது தீபக் சாகருக்கு வழங்கப்பட்டது.


Advertisement