விளையாட்டு

திரும்பவும் நீ எங்கள தொற்றுக்க கூடாது..! சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹீர் தனது டிவிட்டர் பக்கத்தில் என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!

Summary:

Imran Tahir twit about CSK victory goes viral

நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் பேட்ட படத்தில் வரும் ரஜினி பேசும் வசனத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு அபுதாபியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் முரளி விஜய் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த அம்பதி ராய்டு  மற்றும் டுப்ளஸி  இருவரும் அதிரடியாக விளையாடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

சிறப்பாக விளையாடிய சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு 71 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்நிலையில் சென்னை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ட படத்தில் வரும் ரஜினி பேசும் வசனம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

" திரும்பவும் நீ எங்கள தொற்றுக்க கூடாது. தொட்டுட்ட, தொட்டவனா நாங்க என்னைக்கும் விட்டாதே இல்லை... என்று வரும் வசனத்தை பதிவிட்டுள்ளார்."


Advertisement