எந்த இந்திய வீரரும் இதுவரை செய்யாத சாதனை.. செஞ்சு காட்டிய தமிழக வீரர் நடராஜன்.. ஐசிசி பாராட்டு.ICC wishes to Indian player Natarajan

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ICC பாராட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 போட்டிகளை அடுத்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றநிலையில், T20 தொடரை இந்திய அணி வென்றது.

T20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் நடராஜன். இதனால் அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் இடம் கிடைத்தது. ஆனால் கடந்த போட்டியில் நடராஜன் களமிறக்கப்படவில்லை. ஆனால் தற்போது நடந்துவரும் 4 வது டெஸ்ட் போட்டியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

AUS vs IND

ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டிகளில் களமிறங்கி தனது முதல் சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளை பதிவு செய்த நடராஜன், தற்போது தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியையும் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில், ஒருநாள், T20 , டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி, தனது முதல் போட்டியை பதிவு செய்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடராஜன்.

நடராஜனின் இந்த சாதனையை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடராஜனை பாராட்டியுள்ளது.

AUS vs IND