கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு டி20 உலகக்கோப்பை தொடர்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரானது அடுத்ததாக 2021 மற்றும் அதற்கு அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு நடைபெறும் என ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் அதற்கு அடுத்த டி20 உலகக்கோப்பையானது ஒரே ஆண்டு இடைவெளியில் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டி20 உலகக்கோப்பை 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.
🚨 TOURNAMENT UPDATES 🚨
— ICC (@ICC) August 7, 2020
🇮🇳 2021 @T20WorldCup ➡️ India
🇦🇺 2022 #T20WorldCup ➡️ Australia
🇳🇿 2021 Women's @CricketWorldCup postponed to 2022 pic.twitter.com/4bVmTIkQCt