ஐசிசி தரவரிசை: பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர்கள்.!

icc oneday ranging announced 1st kohli


icc oneday ranging announced 1st kohli

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பந்துவீச்சில் பும்ரா ஆகிய இருவரும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி விளையாடியது. இந்நிலையில் அனைத்து தொடர்களையும் இழந்து நாடு திரும்பியுள்ளது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர்.

Image result for jasprit bumrah

ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் என்று வென்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும் ரோகித் சர்மா 871 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றனர். ஷிகர் தவான் ஒரு இடம் முன்னேறி எட்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

Image result for rohit sharma

பந்து வீச்சாளா்கள் தரவரிசையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளா் பும்ரா 841 புள்ளிகள் சோ்த்து முதல் முறையாக தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளாா். குல்தீப் யாதவ் 723 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், சாஹல் 5வது இடத்திலும் உள்ளனா்.