விளையாட்டு

ஐசிசி ஒருநாள் போட்டி டாப் 10 வீரர்களின் பட்டியல் வெளியீடு! முழு விவரம் இதோ!

Summary:

ICC ODI Ranking list 2019

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த பந்துவீச்சாளர் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 895 புள்ளிகளுடன் சிறந்த பேட்ஸ்மேன் வரிசையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளார்.

863 புள்ளிகளுடன் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேபோல், சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் இந்திய அணி வீரர் பும்ரா 797 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து வீரர் போல்ட் 740 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி வீரர் முகமத் நபி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.


Advertisement