ஆசையாக சிக்கன் வாங்கிட்டு வந்த கணவன்! சாப்பிட அடம்பிடித்த மனைவி! கோபத்தில் புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!



husband-suicide-after-fight-in-kumbakonam-love-marriage

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் காதல் திருமணம் செய்த ஒரு ஜோடிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவன் தற்கொலை செய்து கொண்டார் எனும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) என்பவர் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் பணியாற்றிய சுபலட்சுமி (வயது 25) என்பவருடன் அவர் காதலித்து வந்தார். இருவருக்கும் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்கள் கடந்த மாதம் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

திருமணத்திற்கு பிறகு, இருவரும் திருப்பூரில் உள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசிக்கத் தொடங்கினர். சில தினங்களுக்கு முன்னர் மேனகா மற்றும் அவரது கணவர் திருச்சியில் நடைபெறும் கோவில் விசேஷத்திற்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் மணிகண்டன் மற்றும் சுபலட்சுமி இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர்.

இதையும் படிங்க: ஊஞ்சலில் விளையாடிய குழந்தை ! மாலை வீடு திரும்பிய மகள் பார்த்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்..

அப்போது மணிகண்டன் கடையிலிருந்து சிக்கன் வாங்கி வந்து, மனைவியிடம் சாப்பிட கூறியுள்ளார். ஆனால் சுபலட்சுமி, "அக்கா கோவிலுக்கு சென்றுள்ளார், அதனால் சிக்கன் சாப்பிடக்கூடாது" என கூறியதாக தகவல். இதனால் மணிகண்டன் கடும் கோபத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றும், மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரணை தொடரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!