சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பிரபல அதிரடி வீரர்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பிரபல அதிரடி வீரர்!


Hashim Amla retired


தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா இதுவரை 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள், 44 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆம்லா இதுவரை மொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 18672 ரன்களை எடுத்துள்ளார். இதில் 55 சதங்கள் மற்றும் 88 அரைசதங்கள் ஆகியவற்றை அடித்துள்ளார்.மேலும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா வீரர்களில் 300 ஓட்டங்களை கடந்த ஒரே வீரர் ஆம்லா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 36 வயதான ஆம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 2000, 3000, 4000, 5000, 6000, 7000 ஆகிய ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தது ஹாசிம் ஆம்லா என்பது குறிப்பிடத்தக்கது.