இந்தியாவின் மருமகனான மற்றுமொரு பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் மருமகனான மற்றுமொரு பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்!



Hasan ali marrued indian girl shamiya arzoo

பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி இந்தியாவை சேர்ந்த சாமியா அர்சூ என்ற பெண்ணை நேற்று துபாயில் திருமணம் செய்து கொண்டார். 

ஹரியானாவை சேர்ந்த சாமியா அர்சூ சில மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு நடந்த விருந்து ஒன்றில் ஹசன் அலி மற்றும் சாமியா இருவரும் சந்தித்துள்ளனர். பின்னர் ஹசன் அலி தனது திருமண விருப்பத்தை சாமியாவிடம் தெரியப்படுத்தியுள்ளார். 

Hasan ali

இந்நிலையில் இரண்டு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் நேற்று துபாயில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் இருவரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். 

பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய பெண்ணை மணந்த மற்றொரு கிரிக்கெட் வீரராக ஹசன் அலி உருவாகியுள்ளார்.