விளையாட்டு

2011 vs 2019: அன்றும்; இன்றும்; மலரும் நினைவை புகைப்படமாக பகிர்ந்த ஹார்டிக் பாண்டியா!

Summary:

Hardik shared pic of 2011 celebration

இங்கிலாந்தில் வரும் மே 30 ஆம் தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

இந்திய அணி பேட்டிங் பவுலிங் என அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக இந்திய அணிக்கு குறையாக இருந்த ஆல்ரவுண்டர் இடத்தை தற்போது ஹார்டிக் பாண்டியா நிரப்பியுள்ளார். 

இதற்கு முன்னர் ஆடிய சர்வதேச போட்டிகளை விட நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஹார்டிக் பாண்டியாவின் பேட்டிங் திறமையை கண்டு அனைத்து எதிரணிகளுமே அச்சத்தில் உள்ளன. ஆட்டத்தை தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் எந்த நேரத்திலும் மாற்றும் திறமை ஹார்டிக் பாண்டியாவிடம் உள்ளது. 

குஜராத்தின் சூரத்தில் பிறந்து, வதோதராவில் வளரந்த ஹார்டிக் பாண்டியாவிற்கு தற்போது 25 வயதாகிறது. இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் ஆடுவது இதுதான் முதல்முறை. 

இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி கோப்பையை வெல்லும் போது நண்பர்களுடன் கொண்டாடிய புகைப்படத்தையும், தற்போது இந்திய அணியினருடன் இங்கிலாந்தில் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ள ஹார்டிக் பாண்டியா, "எனது கனவு நினைவாகியுள்ளது" என பதிவிட்டுள்ளார். 


Advertisement