ஐபிஎல் 2022ல் செம டுவிஸ்ட்.! ஹர்திக் பாண்டியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

ஐபிஎல் 2022ல் செம டுவிஸ்ட்.! ஹர்திக் பாண்டியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!


hardik Pandya may be captain as a new team

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  ஐபிஎல் 14ஆவது சீசன் முடிந்த உடன், புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு 15ஆவது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இதன்படி புதிதாக வந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இதன்படி லக்னோ அணியில் கே எல் ராகுல் கேப்டனாக தேர்வாவார் என கூறப்பட்டது. அதே அணியில், வார்னர் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியானது. அதேபோல் அகமதாபாத் அணியில் இஷான் கிஷான் மற்றும் ரஷீத் கான் ஆகியோரும் களமிறங்கவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. மேலும், அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின், மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை ஹர்திக் பாண்டியா ஆடி வந்தாலும், ஆல் ரவுண்டரான அவர் பந்து வீசாமல் இருந்து வந்தது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மீண்டும் பார்முக்கு திரும்பி தன்னை முழுவதுமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.