விளையாட்டு

பன்றிகள்.. சர்ச்சையை கிளப்பிய ஹர்பஜன் சிங்! வைரலாகும் டிவிட்டர் பதிவு! யாரை கூறுகிறார்? குழப்பத்தில் ரசிகர்கள்.

Summary:

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் போட்டுள்ள டிவிட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் போட்டுள்ள டிவிட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் முன்னணி வீரராக திகழ்ந்த ஹர்பஜன்சிங் தற்போது சினிமாவில் நடித்துவருகிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபில் போட்டியில் விளையாடிவந்த இவர் இந்த ஆண்டு ஐபில் போட்டிகள் தொடங்க இருந்த சில நாட்களில் ஐபில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் வெளியேறினார் என்று கூறப்பட்டாலும், சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் அவர் அணியில் இருந்து வெளியேறினார் என்ற பேச்சும் எழுந்தது. மேலும் அவ்வப்போது சென்னை அணியின் ஆட்டம் குறித்தும், அணியின் கேப்டன் தோனி குறித்தும் அவ்வப்போது ஹர்பஜன்சிங் செய்துவரும் ட்விட் கடும் விமர்சனங்களை உண்டாகியுள்ளது.

முன்னதாக ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் நடுவர் அகலப்பந்து கொடுக்க முயற்சித்தபோது தோனி முறைத்ததால்தான் நடுவர் அகலப்பந்து கொடுக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இந்த வீடியோவை பார்த்த ஹர்பஞ்சன்சிங் சிரிக்கும் சிரிக்கும் ஸ்மைலிக்களை குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது ஹர்பஜன்சிங் மறைமுகமாக மற்றொரு டிவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "பன்றிகளோடு நாம் மல்யுத்தம் செய்யக் கூடாது. அப்படி செய்தால், நம் மீது தான் சேறு படும். அதைத் தான் பன்றிகளும் விரும்பும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ஹர்பஞ்சன்சிங் யாரை குறிப்பிடுகிறார்? சென்னை அணியை குறித்து இப்படி பகிர்ந்துள்ளாரா அல்லது கமெண்ட் செய்யும் ரசிகர்கள் குறித்து இவ்வாறு பகிர்ந்துள்ளாரா என குழப்பத்தில் உள்ளனர். எனினும் இந்த பதிவிற்கும் சென்னை அணி ரசிகர்கள் தொடர்ந்து அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.


Advertisement