இந்தியா விளையாட்டு

கொரோனா சமயத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த நிர்வாகம்! சந்தோசத்தில் வீரர்கள்!

Summary:

Happy news for cricket players

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்று வாரிய பொருளாளர் உறுதியளித்துள்ளார்.

பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். கொரோனா பரவியதில் இருந்து எந்த நாட்டிலும் எந்த போட்டியும் நடைபெறவில்லை. அதேபோல் கிரிக்கெட் போட்டியும் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை.

கொரோனா காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள வீரர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் உறுதியளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். போட்டி நடக்காமல் போனால் அது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகும். அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் சம்பள பிடித்தம் குறித்து சிந்திப்போம். ஆனால் அது கடைசியான வாய்ப்பாக தான் இருக்க முடியும். வீரர்களின் சம்பளத்தை குறைக்காமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை எல்லாம் நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.


Advertisement