
Good news coming for cricket fans
இந்தியாவில் நடைபெற இருக்கும் 2023 உலக்கோப்பை தொடருக்கான தகுதிசுற்றினை இந்த ஆண்டு முதலே உலகக்கோப்பை சூப்பர் லீக் என்ற பெயரில் நடத்துவதாக ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இந்த சூப்பர் லீக் தொடரின் முதல் போட்டியில் வருகிற 30 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. 2023 உலக்கோப்பைக்கு முன்புவரை நடைபெறவிருக்கும் இந்த சூப்பர் லீக் தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக்கோப்பை தொடரில் விளையாட தகுதிபெறும். மற்ற அணிகள் தகுதிசுற்றில் பங்குபெற வேண்டும்.
இந்த தொடரில் மொத்தமுள்ள 13 அணிகளும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தலா 4 தொடர்களில் பங்குபெறும்.
இதனால் ஒவ்வொரு ஒருநாள் கிரிக்கெட் தொடரும் சுவாரஸ்யமாக அமையும் என ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட் வீரர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement