விளையாட்டு

அந்த வீரர் இல்லைனா இந்திய அணி வீக் ஆயிடும்! கங்குலி யாரை சொல்கிறார் தெரியுமா?

Summary:

Ganguly talks about india vs australia for odi match

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது இந்திய அணி.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் போராடி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருந்ததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்து. அதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பும்ரா அணியில் இருந்திருந்தால் இந்தியா தோல்வி அடைந்திருக்காது என பலரும் கூறினர்.

இந்நிலையில் இந்தியாவின் தோல்விபற்றி பேசிய முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு பலம் குறைந்ததாகவே உள்ளது என கூறினார்.


Advertisement