"நான் பதவியேற்றதும் தோனியின் நிலை என்னவாகும்?" கங்குலி அதிரடி பேட்டி

"நான் பதவியேற்றதும் தோனியின் நிலை என்னவாகும்?" கங்குலி அதிரடி பேட்டி


Ganguly talks about dhoni

இந்திய கிரிக்கெட் வாரிய பிசிசிஐ புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எந்தவித போட்டியுமின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 

இந்நிலையில் அவர் தலைவர் பொறுப்பேற்றதும் தோனி குறித்து என்ன முடிவு எடுப்பீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள கங்குலி, வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான தொடருக்கான வீரர்கள் தேர்வு நடைபெறவுள்ளது. அப்போது தேர்வு குழுவினரிடமும் அணித் தலைவரிடமும் நிச்சயம் தோனியின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்வேன். 

dhoni

அதற்கு முன்னதாக தோனியின் தற்போதைய மனநிலை என்ன, அவரது எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து தோனியிடம் பேசவுள்ளளேன். அதன் பிறகே அவரை குறித்த முடிவு எடுக்கப்படும் என கங்குலி கூறியுள்ளார். 

தோனியை பொறுத்தவரை உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இரண்டு மாதங்கள் விடுப்பு கேட்டிருந்தார். அதன் பின்னர் நவம்பர் மாதம் வரை விடுப்பு வேண்டுமென்றார். 

dhoni

இந்நிலையில் வங்கதேச தொடரில் பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை வரை தோனி ஆடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய பிசிசிஐ தலைவர் கங்குலி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.