கோகோ கோலாவை அகற்றிய ரொனால்டோ.! பீர் பாட்டிலை அகற்றிய மற்றொரு வீரர்.! தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்.!

கோகோ கோலாவை அகற்றிய ரொனால்டோ.! பீர் பாட்டிலை அகற்றிய மற்றொரு வீரர்.! தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்.!


football-player-avoid-beer

கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம்  கோகோ-கோலா பாட்டில்களை அகற்றியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, மற்றோரு பிரபலமான கால்பந்து வீரரான பால் போக்பா பிரபல நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு எதிரே இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த 2 கோகோ கோலா பாட்டில்களை நகர்த்தி வைத்துவிட்டு, தனது முன்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து என்னிடம் தண்ணீர் உள்ளது என்று காட்டினார். 


இதனால் கோகோ கோலா நிறுவனத்துக்கு 4 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொனால்டோ செய்த செயலால் கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.


இதேபோன்று பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் பால் போக்பா பத்திரிகையாளர் சந்திப்பில், அவருக்கு எதிரே இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டிலை அகற்றுமாறு தெரிவித்தார். இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் பால், மதுவுக்கு எதிரானவர் என்பதே யூரோ கோப்பை ஸ்பான்ஸர் நிறுவனமான ஹெனிக்கன் நிறுவனத்தின் பீர் பாட்டிலை அகற்றியதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கோகோ - கோலா குளிர்பானத்துக்கு எதிராக ரொனால்டோவின் இந்தச் செயலையும், மதுவிற்கு எதிராக பால் போக்பா செய்த செயலையும் சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்றுள்ளனர்.