விளையாட்டு

உலகின் காஸ்ட்லி காரை வாங்கிய பிரபல விளையாட்டு வீரர்! ஆத்தாடி...இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Summary:

famous football player ordered new car

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகிலேயே மிகவும் அரிதானதும், விலை உறைந்த காரை முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

35 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது ஜூவண்டஸ் என்ற பிரபல இத்தாலிய கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ தற்போது உலகின் மிகவும் அரிதானதும், விலை கொண்டதுமான புகாட்டி லா காரை(Bugatti La Voiture Noire) முன்பதிவு செய்துள்ளார்.

இக்காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த காரின் நம்பர் பிளேட்டில் சிஆர் என்ற தனது பெயரின் இனிஷியலை பொறித்துள்ளார். உலகில் இந்த ரக கார்கள் மொத்தம் 10 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றை தான் ரொனால்டோ வாங்கியிருக்கிறார். இக்கார் அடுத்த ஆண்டில் ரொனால்டோவிற்கு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement