உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு மோசமான நிலமையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!England vs Ireland match report

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி முடிவடைந்தது. 10 அணிகள் விளையாடிய இந்த தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டியில் விளையாடியது. போட்டி சமமானதால் சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. அதிலும் சமமானதால் அதிக பவுண்டரி முறையில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தாலும் நியாயப்படி அந்த கோப்பை நியூசிலாந்து அணிக்குத்தான் செல்லவேண்டும் என சமூக வலைத்தளங்களில் நியூசிலாந்து அணிக்குக்கு ஆதரவாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

World cup 2019

ஒருவழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தற்போது இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்துவரும் இங்கிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் மிகவும் கீழே உள்ள அயர்லாந்து அணியுடன் மிகவும் மோசமாக விளையாடிவருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.