இந்தியா விளையாட்டு

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திக்குமுக்காடிய இங்கிலாந்து அணி.! கெத்து காட்டிய அக்‌ஷர் பட்டேல்.!

Summary:

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 112 ரன்கள் எடுத்த நிலையில் அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய அணியின் பந்து வீச்சாளர் அக்சர் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். கில் 11 ரன்கள் எடுத்தநிலையில் ஆர்ச்சர் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய புஜாரா டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய விராட் 27 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. தற்போது களத்தில் ரோஹித் சர்மா 57 ரன்களுடனும், ரகானே ஒரு ரன் எடுத்த நிலையிலும் உள்ளனர்.


Advertisement