அரசியல் தமிழகம் விளையாட்டு

தல தோனியின் ஓய்வு குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

edapadi palanichami talk about ms Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

 கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரானா அரையிறுதி ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார். அதன்பிறகு தோனி எந்த ஒரு சர்வேதச போட்டிகளிலும் விளையாடவில்லை.

கிரிக்கெட் ரசிகர்களை ஏறத்தாழ 16 ஆண்டுகள்  தன் அசாத்திய திறமைகளால் கட்டிப்போட்டவர்  இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி.  இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி பற்றி பதிவிட்டுள்ளார் 

அந்த பதிவில், "சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தி நாட்டிற்காக 3 சாம்பியன் ஷிப்களை வென்ற ஒரே கூல் கேப்டன் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும், தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement