விளையாட்டு

பாராட்டிய பிரபலங்கள்! தினேஷ் கார்த்திக் பதவி விலக இதுதான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடந்துவரும் ஐபில் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டுவந்தார். அவரது தலைமையில் கொல்கத்தா அணி 7 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

மேலும் தினேஷ் கார்த்திக்கின் அபார கேப்டன்ஷிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். குறிப்பாக சென்னை அணியுடன் கொல்கத்தா அணி வெற்றிபெற தினேஷ் கார்த்திக் வகுத்த வியூகங்கள்தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் நடச்சிரா வீரர் ஷேவாக் உட்பட பலரும் அவரை பாராட்டியிருந்தனர்.

IPL 2019: Coach Jacques Kallis denies that KKR are considering sacking Dinesh  Karthik as captain

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன் தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம், இனி வரும் போட்டிகளில் அவர் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த விரும்புவதே என கூறப்படுகிறது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 108 ரன்கள் மட்டுமே அடித்துள்ளதால், இனி வரும் ஆட்டங்களில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி அணியின் வெற்றிக்கு உதவ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement