இந்தியா விளையாட்டு

குடும்பத்தோடு ஹேப்பியாக பிறந்தநாள் கொண்டாடிய தினேஷ் கார்த்திக்.!! அவரது குழந்தைகளை பார்த்தீங்களா! வைரல் புகைப்படங்கள்.!

Summary:

குடும்பத்தோடு ஹேப்பியாக பிறந்தநாள் கொண்டாடிய தினேஷ் கார்த்திக்! அவரது குழந்தைகளை பார்த்தீங்களா.! வைரல் புகைப்படங்கள்.!

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக். இவர் இறுதியாக 2019ஆம் ஆண்டு உலககோப்பை போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடினார். அதனை தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை. 

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் சிறப்பாக விளையாட துவங்கிய நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஜூன் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் நேற்று தனது 37வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக தனது குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது மனைவி தீபிகா பல்லிக்கல் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எனக்கு எல்லாமுமான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு  வாழ்த்து கூறியுள்ளனர்.

 


Advertisement