விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா நம்ம தோனியா இது! புது அவதாரமே இருக்கே! இணையத்தையே தெறிக்கவிடும் அசத்தல் வீடியோ! குவியும் லைக்குகள்!

Summary:

dhoni singing video viral

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருப்பவர் தல தோனி. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தமிழகத்தில் தோனிக்கென தனிரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தோனி சென்னை அணியின் தலைவராக இருந்து பல முறை வெற்றி பெற்று பெருமை அடைய செய்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரரான தல தோனிக்கு நாட்டின் மீதும் இந்திய ராணுவத்தின் மீது பெரும் பற்று உள்ளது. மேலும் தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு ரசிகர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அணியில் எப்பொழுது இணைய உள்ளீர்கள் என தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.இதற்கு தோனி ஜனவரி வரை பொறுமையாக இருங்கள் என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் தல தோனி செய்யும் ஒவ்வொரு செயல்களையும் சமூக வலைத்தளங்களில்அவரது ரசிகர்கள் டிரண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் தோனி மைக்கில் பழைய ஹிந்தி பாடல் ஒன்றை பாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement