விளையாட்டு

தோனியின் ஓய்வு குறித்து கேப்டன் விராட் கோலி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு...

Summary:

dhoni-retires--virat-kohli-tips-a-hat-former-indian

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் டோனியின் ஓய்வு குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஒருநாள் தன்னுடைய பயணத்தை முடித்தாக தான் வேண்டும். ஆனால், மனதிற்கு மிக நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

மேலும் இந்த நாட்டிற்காக டோனி செய்துள்ள சாதனைகள் அனைவரின் நினைவுகளிலும் நீங்காத இடத்தை அவருக்கு அளிக்கும். சக வீரராக தோனி கொடுத்த மரியாதையும், அரவணைப்பும் தன்னுள் நீங்காமல் இருக்கும். அவருக்கு தலை வணங்குகிறேன் என நெகிழ்ச்சி பதிவு ஒன்றை விராட் கோலி பதிவிட்டுள்ளார். 


Advertisement