நான் எப்போதுமே வேற மாதிரி தான்; மீண்டும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய தோனி!

நான் எப்போதுமே வேற மாதிரி தான்; மீண்டும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய தோனி!


Dhoni refuses to inaugurate his own pavilion

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் பெவிலியன் பகுதிக்கு தோனியின் பெயரை மைதானத்தின் நிர்வாகம் வைத்துள்ளது. இதனை திறந்து வைக்க தோனி மறுத்துள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை 8ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜார்கண்ட், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த மாநிலம் ஆகும். 

ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து, இந்தியா மட்டுமின்றி இந்த உலகமே வியக்கும் வண்ணம் பல்வேறு சாதனைகளை புரிந்த தோனி. ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு இவர் அனைத்து சர்வதேச தொடர்களிலும் கோப்பையை வென்று சிறந்த கேப்டனாக திகழ்ந்துள்ளார்.

dhoni

இவர் விளையாட்டில் மட்டுமின்றி, அனைத்து விசயங்களிலும் பொறுமையாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பவர். இவரை "கேப்டன் கூல்" என அனைவரும் அழைப்பதை யாரும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட தோனி மீண்டும் தன்னை ஒரு சிறந்த மனிதர் என்பதை நிரூபித்துள்ளார். 

நாளை 8ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள ராஞ்சி JSCA மைதானத்தில் தென்புறம் உள்ள பெவிலியனுக்கு 'MS DHONI PAVILION' என பெயர் மாற்றியுள்ளனர். இந்த புதிய பெவிலியனை மூன்றாவது போட்டி துவங்குவதற்கு முன்பு தோனியில் கையாலேயே திறந்து வைக்க நிர்வாகம் தோனியை அணுகியுள்ளது. 

dhoni

ஆனால் தோனி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், "இந்த மைதானத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கின்றேன். அப்படியிருக்க, எப்படி ஒருவர் தன் சொந்த வீட்டையே திறந்து வைக்க முடியும்?" எனக் கூறியுள்ளார்.