விளையாட்டு

நேற்றைய மோசமான தோல்விக்கு நடுவிலும் பெரிய சாதனை படைத்த தோனி! என்ன சாதனை தெரியுமா?

Summary:

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த நேற்றைய போட்டியில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையே நடந்த நேற்றைய போட்டியில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் அடித்தது.

126 என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் நிதானமாக விளையாடி 17.3 ஓவர்களில் 126 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெற செய்தனர். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இருப்பினும் நேற்றைய போட்டியின் மூலம் சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபில் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து விளையாடிவரும் தோனி, நேற்றைய போட்டியின் மூலம் தனது 200 வது ஐபில் T20 போட்டியை எட்டியுள்ளார். மேலும் 200 ஐபில் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் தோனி என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.


Advertisement