விளையாட்டு

நீண்டநாள் ஆசை நிறைவேறியது! தல தோனியை கொண்டாடும் ரசிகர்கள்.!

Summary:

dhoni photo with mentally challenged boy

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் கோப்பைக்கான 12 வது  சீசன் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதியது. மேலும் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 
மேலும் இப்போட்டியில் விளையாட வந்த தோனியை காண ஏராளமான ரசிகர்கள் வருகை தந்தனர். 

இந்நிலையில் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தாம்சன் ஆனந்த்ராஜ் என்பவரின் மகன் டேவிட். இவர் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் மகேந்திர சிங் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். மேலும் இவர் தோனி விளையாடும் அணைத்து போட்டிகளையும் தவறாமல் பார்க்கும் இவர் தோனியை நேரில் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து டேவிட்டின் தந்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து தோனியை  விமான நிலையத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தார். மேலும்  சென்னை விமான நிலையத்தில் வீரர்கள் செல்லும் பாதையில் சிறப்பு அனுமதி பெற்ற   அவர் தோனியை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


Advertisement