நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோணி செய்த காரியம்! மகிழ்ச்சியான ரசிகர்கள்!

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோணி செய்த காரியம்! மகிழ்ச்சியான ரசிகர்கள்!


Dhoni celebrated may 1 workers day after the match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 50 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் சீசன் 12 முடிவடைய உள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நேற்று சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அணியை 80 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்று மே 1 தொழிலாளர் தினம் என்பதால் நேற்றைய போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோணி மைதானத்தில் உள்ள தொழிலாளர்களுடன் உரையாடியும், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


அதுமட்டும் இல்லாமல் போட்டி முடிந்த பிறகு மஞ்சள் நிற பந்துகளை தோணி தனது ரசிகர்கள் இருக்கும் திசை நோக்கி பறக்கவிட்டார், மேலும் சென்னை அணியின் உடை, தொப்பி போன்ற பரிசு பொருட்களும் சென்னை ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தோணி செய்த காரியம் அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.