இந்தியா விளையாட்டு Covid-19

வீட்டிலேயே முடங்கியதால் ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! வைரலாகும் வீடியோ!

Summary:

Dhawans stage after home isolation

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கொரோனா வைரஸால் வீட்டிலேயே முடங்கியதால் தனக்கு ஏற்பட்டுள்ள நிலையை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எப்போதும் பிஸியாக வெளியில் சுற்றும் பலரும் தற்போது வீட்டில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர். இந்த வகையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஷிகர் தவானின் மனைவி அவரை துணிக்க துவைக்க வைப்பதும், கழிவைறையை சுத்தம் செய்ய வைப்பதும் என வேலை வாங்குகிறார். தவான் பதிவிட்டுள்ள இந்த வீடியோ நகைப்பாக இருந்தாலும் எத்தனை பேர் வீட்டில் உண்மையாகவே இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்று தெரியவில்லை.


Advertisement