இந்தியா விளையாட்டு

யுவராஜின் சாகசத்தை முறியடித்த ஷிகர் தவான்! வைரல் வீடியோ!

Summary:

Dhawan beat yuvaraj challenge


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். 

தற்போது ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் எனப் பல்வேறு சவால்கள் சமூக வலைத்தளத்தில் தீவிரமாய் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது பாட்டில் மூடி சேலஞ்ச் பிரபலமடைந்து ட்ரெண்டாகி வருகிறது. கஜகஸ்தானை சேர்ந்த தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடியை மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பாட்டிலை உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும் அந்த வீடியோவை பதிவிட்டு இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விட்டுள்ளார். இதனையடுத்து பல பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வித்தியாசமாக பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து, அதனை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாட்டில் மூடி சேலஞ்ச் என்றால் காலால் உதைத்து மூடியை தெறிக்க விடவேண்டும். ஆனால் யுவராஜ் ஒருபடி மேலே சென்று கிரிக்கெட் பந்து மூலம் இதனை யுவராஜ் செய்துள்ளார். 

யுவராஜின் சாகசத்தை முறியடிக்கும் வகையில் தவான் அவரது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் " ஹாய் யுவராஜ்,  காயத்திற்கு பிறகு இன்று தான் முதல்முறையாக பேட்டினை கையில் பிடிக்கிறேன். மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி" என கூறி பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்துள்ளார்.


Advertisement