விளையாட்டு

சூடுபிடிக்கும் ஐபிஎல்.. அறிமுக போட்டியிலேயே அடித்து நொறுக்கும் இளம் வீரர்!

Summary:

Devdut padikal fifty in debut ipl

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் அனுபவ வீரர் ஆரோன் பின்ச்சும் அறிமுக வீரர் தேவ்தூத் படிக்கல்லும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரோன் பின்ச் ஆட்டத்தை பொறுமையாக ஆரம்பிக்க படிக்கல் துவக்கம் முதலே அடாவடியாய் ஆட துவங்கினார்.

இடதுகை பேட்ஸ்மேனான அறிமுக போட்டியிலேயே அனுபவ வீரரை போல எதிரணியினரின் பந்துகளை அசால்டாக அடித்து நொறுக்கினார். 36 பந்துகளில் அரைசதத்தை கடந்து விளையாடி வருகிறார் படிக்கல்.

10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்துள்ளது. படிக்கல் 53, பின்ச் 28 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.


Advertisement