முதல் குவாலிபயர்: டாஸ் வென்று டெல்லி கேப்பிடஸ் அணி முதலில் பந்துவீச்சு!

முதல் குவாலிபயர்: டாஸ் வென்று டெல்லி கேப்பிடஸ் அணி முதலில் பந்துவீச்சு!Dc won the toss and elected to bowl first

ஐபிஎல் 2020 டி20 தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும் என்ற நோக்கத்தில் தான் இந்த முடிவினை எடுப்பதாக அவர் கூறினார்.

ipl

டெல்லி அணியில் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் களமிறங்குகின்றனர். மும்பை அணியை பொறுத்தவரை பும்ரா, போல்ட் மற்றும் ஹார்டிக் பாண்டியா இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.