விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா..! வைரலாகும் பதிவுdavid warner wishes to vinayagar chathurthi

ஆஸ்திரேலிய பேட்டிங் ஸ்டார் டேவிட் வார்னர், அவருடைய பேட்டிங்கைத் தாண்டி இன்ஸ்டா போஸ்ட்களுக்கும் பெயர் பெற்றவர். அவரது நடன அசைவுகளுக்காகவும், பிரபல நடிகர்களைப் போல் தன்னை சித்தரித்து அவர் வெளியிடும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகும். இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு என்றே கூறலாம். ஐபிஎல் கிரிக்கெடில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்திய சினிமா பாடல்களுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடும் வீடியோவை வார்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.


இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வார்னர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "எனது நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுற்று இருக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.