தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.! சோகத்தில் இருந்த சென்னை ரசிகர்களை துள்ளிக் குதிக்கவைத்த தல தோனி.!!

தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.! சோகத்தில் இருந்த சென்னை ரசிகர்களை துள்ளிக் குதிக்கவைத்த தல தோனி.!!csk-fans-feeling-happy-for-dhoni-sixer

13வது ஐபிஎல் லீக்கின் நான்காவது போட்டி நேற்று (22-09-2020) ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

சிறப்பாக விளையாடிய  ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி  9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் மற்றும் ஷேன் வாட்சன்  ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, வாட்சன் 21 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிஎஸ்கே அணியின் டுபிளெசிஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி பின்னர் அதிரடி ஆட்டத்தை துவங்கினார்.

Msd

சிஎஸ்கே அணியில் சிறப்பாக ஆடிய டுபிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோணி கடைசி ஓவரில் ரசிகர்களை திருப்தி படுத்தினார். இறுதி ஓவரில் 37 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற எட்ட முடியாத இலக்கு இருக்கும் போது தோனி அந்த ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதில் ஒரு சிக்ஸர் மைதானத்தை தாண்டி வெளியே உள்ள சாலையை தாண்டி விழுந்தது. 

சிஎஸ்கே அணி 6 விக்கெட்கள் இழந்து 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. சென்னை அணி தோல்வியடைந்தாலும் இறுதி ஓவரில் தல தோனி அடித்த சிக்ஸர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியது.