தமிழகம் இந்தியா விளையாட்டு

தல தோனியை காண வேண்டும் என்பதே எனது கனவு.! தற்போது அவருடனே விளையாடவுள்ளேன்.! உச்சகட்ட குஷியில் தமிழக வீரர்.!

Summary:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், ரூ. 14.25 கோடிக்கு மேக்ஸ்வெல்லும், ரிச்சர்ட்ஸன் ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் எடுக்ககப்பட்டனர்.

இதில் இளம் வீரர்களுக்கான ஏலம் நடந்தது. இதில் தமிழக அணி வீரர் ஷாருக்கானுக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இறுதியில் தமிழக வீரர் ஷாருகானை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 5.25 கோடிக்கு எடுத்தது. 

தமிழக வீரர் ஹரி நிஷாந்தை 20 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக அணியில் துவக்க வீரராக களமிறங்கியவர் ஹரி நிஷாந்த். சையது முஷ்டாக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் ஹரி நிஷாந்த் துவக்க வீரராக களமிறங்கி நல்ல தொடக்கம் கொடுத்து சிறப்பாக ஆடினார்.

சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய ஹரி நிஷாந்த், தோனியை காண வேண்டும் என்பது என் கனவு, தற்போது அவருடன் விளையாட போகிறோம் என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


Advertisement