விளையாட்டு

தான் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 18000 ரூபாய் நன்கொடை! ஆஸ்திரேலிய வீரர் ஓப்பன் டாக்!

Summary:

chris lynn 18000 donation for every sixer


ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்பு படை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

பொதுமக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போதுவரை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் 17 பேர் பலியாகியிருப்பதோடு, 18க்கும் அதிகமானோர் மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய முன்னணி விளையாட்டு வீரர்கள் பலரும், நன்கொடை அளித்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் லின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் போட்டியில் நான் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டாலர் நன்கொடையாக அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், நம் நாடெங்கிலும் உள்ள உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற போராடும் உண்மையான வீரர்களுக்கு பின்னால் பல்வேறு விளையாட்டு துறைகளில் இருந்து வீரர்கள் வருவது பெரும் சிறப்பு எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement