விளையாட்டு

தோல்வியின் விளிம்பில் சென்னை அணி! சோகத்தில் மூழ்கிய சென்னை அணி ரசிகர்கள்!

Summary:

Chennai vs Benglaore less chance for chennai win the match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 38 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில நடப்பு சாம்பியனா சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இன்று தற்போது நடைபெற்றுவரும் 39 வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

பெங்களூரின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்தது. 162 என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து போராடிவருகிறது.

பெங்களூர் அணியின் வீரர் ஸ்டெயின் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஐந்தாவது பந்தில் வாட்சனும், ஆறாவது பந்தில் ரெய்னாவும் ஆட்டம் இழந்தனர். அதன்பின்னர் நான்காவது ஓவரில் ஐந்து ரன் எடுத்திருந்த நிலையில் டுப்ளஸியும், 6 வது ஓவரில் 9 ரன் எடுத்திருந்த நிலையில் ஜாதாவும் அவுட்டானது சென்னை அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது.

8 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன் என்ற நிலையில் சென்னை அணி விளையாடி வருகிறது. ராய்டு, டோனி இருவரும் சேர்ந்து சென்னை அணியின் வெற்றிக்காக போராடி வருகின்றனர். ஆரம்பத்திலையே சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால் தோல்வியின் விளிம்பில் சென்னை அணி வெற்றிக்காக போராடி வருகிறது.


Advertisement