இன்னும் 2 நாட்களில் போட்டி..! இப்போ போய் 3-வது வீரரையும் இழக்கும் சிஎஸ்கே.! என்ன காரணம் தெரியுமா.?

இன்னும் 2 நாட்களில் போட்டி..! இப்போ போய் 3-வது வீரரையும் இழக்கும் சிஎஸ்கே.! என்ன காரணம் தெரியுமா.?


Chennai Super Kings team player corona test positive

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஒரு வழியாக வருகின்ற 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும், பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டனர். முன்னதாகவே போட்டி நடைபெறும் இடத்திற்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ipl 2020

இதனிடையே சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா ஒரு சில காரணங்களால் சென்னை அணியில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்கும் சென்னை அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களை மேலும் குழப்பம் அடையச் செய்தது.

மிகவும் வலுவான சென்னை அணியில் இருந்து இரண்டு முக்கிய வீரர்கள் வெளியேறியது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு வீரருக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த கட்ட பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Ipl 2020

ஒருவேளை அடுத்த கட்ட பரிசோதனையிலும் கொரோனா இருப்பது உறுதியானால் அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா இல்லை என முடிவு வந்தால் மட்டுமே அவரால் சென்னை அணியில் விளையாட முடியும்.

மேலும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கான மாற்று வீரர்களை சென்னை அணி இதுவரை தேர்வு செய்யவில்லை. இதனிடையே மற்றொரு வீரர் ருதுராஜ் கெயிக்வாட் சிக்கலில் இருப்பதால் மூன்றாவது வீரரையும் சென்னை அணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.