விளையாட்டு

நேற்றைய ஆட்டத்தில் கடும் சந்தேகத்தை எழுப்பிய காட்சிகள்! என்ன நடக்குது சென்னை அணியில்? பரபரப்பு சம்பவம்.

Summary:

பெங்களூரு அணிக்கு எதிரானா நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி கடும் தோல்வியை சந்தித்ததை அடுத்து சென்னை அணி வீரர்களின் செயல்பாட்டில் ரசிகர்களுக்கு கடும் சந்தேகம் எழுந்து வருகிறது.

பெங்களூரு அணிக்கு எதிரானா நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி கடும் தோல்வியை சந்தித்ததை அடுத்து சென்னை அணி வீரர்களின் செயல்பாட்டில் ரசிகர்களுக்கு கடும் சந்தேகம் எழுந்து வருகிறது.

நேற்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 90 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 170 என்ற கடினமான இலக்குடன் சென்னை அணி வீரர்கள் களமிறங்கினர்.

IPL 2020, CSK vs RCB as it happened: Another disappointing run-chase from  CSK as RCB

தொடக்கத்தில் இருந்தே சொதப்ப ஆரம்பித்த சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து ராய்டு மற்றும் ஜெகதீசன் இருவரும் கூட்டணி சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் ஆடியவிதம் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைக்கோடுவரை பந்து சென்றால் கூட இரண்டு ரன்கள் எடுக்க முயற்சிகாகமல் சிங்கிள்ஸ் மட்டுமே ஓடியது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தன்னை ரன்னவுட் செய்ய போகிறார்கள் என்று தெரிந்தும்கூட ஜெகதீசன் டைவ் அடிக்காமல், பேட்டை நீட்டாமல் மெதுவாக ஓடியது சென்னை அணி ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவர்களை தவிர அடுத்து விளையாடி வீரர்களும் எந்த ஒரு உற்சாகமும் இல்லமால் கடமைக்கு விளையாடியதுபோன்றே தோன்றியது. ஏற்கனவே சுரேஷ் ரெய்னா சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை அணியில் இருந்து விலகினார், இதனால் சென்னை அணி நிர்வாகத்துக்கும், அணி வீரர்களுக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு நிகழ்கிறதா? இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லையா என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், சென்னை அணியின் கேப்டன் தோனி மற்ற வீரர்களை அழைத்து அவர்களிடம் பேசி, பிரச்னையை தீர்த்துவைக்கவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துவருகின்றார்.


Advertisement