என் வாழ்வின் கடினமான தருணம் என்றால் இதுதான்; மனம் திறக்கும் தல தோனி.!



chennai super kings captan thala dhoni

ஐபிஎல் T20 தொடரின் 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி, கோலியின் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டிக்கெட்டுகளை வாங்குவதற்கு நள்ளிரவு முதலே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான கவுன்டர்களில் ரசிகர்கள் காத்துக்கிடந்தது நினைவிருக்கலாம்.

IPL 2019

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் பிக்சிங் பற்றி ‘ ரோர் ஆப் தி லயன்’ என்ற ஆவணப்படம் இன்று முதல் இணையத்தில் ஒளிபரப்பாகிறது. இதில் தனது முழு உணர்வுகளையும் தோனி வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தோனி கூறுகையில், ‘நான் இன்று என்னவாக உள்ளேனோ அதற்கு கிரிக்கெட் தான் காரணம். என்னைப்பொறுத்தவரையில், மிகப்பெரிய குற்றம் என்றால் அது கொலையல்ல, மேட்ச் பிக்சிங் தான். இதை தனி ஒரு வீரரால் மட்டும் செய்ய முடியாது. குறிப்பாக எனது பெயருடன் இது வெளியாகும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

IPL 2019

தவிர, மக்கள் கிரிக்கெட் மீதுள்ள நம்பிக்கையும் இழந்துவிடுவார்கள். என் வாழ்நாளில் இவ்வளவு கடினமான விஷயத்தை கடந்தது இல்லை. அது கலவையான உணர்வாக இருந்தது. தனிப்பட்ட வீரராகவும், கேப்டனாகவும் ஆயிரம் கேள்விகள் இருந்தது. இது கண்டிப்பாக தவறான விஷயம் தான், ஆனால் அணியின் வீரர்களோ, உறுப்பினர்களோ இதில் ஈடுபடவில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம் என அனைவரும் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்’ என்றார்.