விளையாட்டு

சென்னை அணிக்கு தலைவலியாக அமையும் அந்த ஒரு விஷயம்! என்ன தெரியுமா?

Summary:

Chennai should focus more on 20th over in all matches

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் கொல்கத்தா அணியை அதன் கோட்டையில் இன்று சந்திக்கவுள்ளது சென்னை அணி. இன்று இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கும் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் சென்னை அணி மோதுகிறது. இதற்கு முன்னர் கொல்கத்தா அணியுடன் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

சென்னை அணி இதுவரை நடந்துள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் சென்னை அணிக்கு எப்போதும் தலைவலியாகவே அமைகிறது. அது என்னவெனில் 20 வது ஓவர். பொதுவாக ஐபில் என்றாலே அணைத்து அணிகளும் அதிரடியாகத்தான் விளையாடும்.

இதுவரை நடந்த போட்டிகளில் முதலில் பவுலிங் செய்த ஆட்டங்களில் சென்னை அணி 19 வது ஓவர் வர சிறப்பாக விளையாடி உள்ளது. ஆனால் 20 வது ஓவரில் மட்டும் சென்னை அணி மிகவும் சொதப்புகிறது. இதற்கு முன்னர் கொல்கத்தா ணியிடனான ஆட்டத்தில் 19 வது ஓவர் வரை 93 ரன் மட்டுமே கொடுத்திருந்த சென்னை அணி கடைசி ஓவரில் மட்டும் 15 ரன் கொடுத்து கொல்கத்தா அணியின் எணிக்கையை உயர்த்தியது.

அதேபோல ராஜஸ்தான் அணியுடன் கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் இறுதி ஓவரில் 18 ரன் கொடுத்தது சென்னை அணி. இதில் கடைசி ஓவரில் 18 எடுத்தால் வெற்றி என்ற நிலை சென்னை அன்னிக்கே வந்து இறுதி பந்தில் சாண்ட்னெர் சிக்ஸ் அடித்து சென்னை அணியை வெற்றிபெற வைத்தார்.

இதுபோன்று பல்வேறு போட்டிகளில் கடைசி ஓவரில் மட்டும் அதிக ரன் கொடுத்து சென்னை அணி சிக்கலில் மாட்டிக்கொள்கிறது. 20 வது ஓவரில் சென்னை சற்று கவனம் செலுத்தினால் இனி வரும் போட்டிகளில் வெற்றிபெற்று சென்னை அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.


Advertisement