2023 ல் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ.!
பெண்களை கேவலமாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.! அதிரடியாக பிசிசிஐ கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?
பெண்களை கேவலமாக பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்.! அதிரடியாக பிசிசிஐ கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

பிரபல இந்தி தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் இருவரும், கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் பிசிசிஐ நிர்வாக குழு இருவரையும் இடைநீக்கம் செய்தது அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் விளையாடவிருந்த ஒரு நாள் தொடரில் இருந்தும் அவர்களை நீக்கினர்.
இந்நிலையில் இன்று விசாரணையின் முடிவில் இருவருக்கும் தலா 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தலா ஒரு லட்சம் ரூபாயை அவர்கள் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த 10 துணை இராணுவப் படையினர் குடும்பத்திற்கும், மீதி 10 லட்சம் ரூபாயை பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.